நடிகர் செளந்திரராஜாவுக்கு குவியும் வாழ்த்துகள்! என்ன விஷயம் தெரியுமா?

செளந்திரராஜா

நடிகர் செளந்திரராஜாவின் மனைவி தமன்னாவுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது.

 • Share this:
  நடிகர் செளந்திரராஜாவின் மனைவி தமன்னாவுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது.

  வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் செளந்திரராஜா. இவர் சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் கவனிக்க வைக்கும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

  தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இடி முழக்கம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் செளந்திரராஜா. இதற்கிடையே அவர் கடந்த 2018-ம் ஆண்டு, தமன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இப்போது தமன்னா கர்ப்பமாக இருக்கிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Actor Soundararaja wife Tamanna baby shower function, actor soundararaja, tamil actor soundararaja, soundararaja tamil actor, actor soundararaja age, நடிகர் செளந்திரராஜா, செளந்திரராஜா படங்கள், செளந்திரராஜா மனைவி, நடிகர் செளந்திரராஜா படங்கள்
  மனைவியுடன் செளந்திரராஜா


  இந்நிலையில் தற்போது செளந்திரராஜா வீட்டில் தமன்னாவுக்கு எளிமையாக வளைகாப்பு நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: