சூரி கொடுத்த புகார் - விஷ்ணு விஷாலின் நெருங்கிய தோழி ரியாக்‌ஷன்

விஷ்ணு - ஜூவாலகட்டா

சூரியின் நிலமோசடி விவகாரம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் விஷ்ணு விஷாலின் நெருங்கிய தோழி சமூகவலைதளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  'வீர தீர சூரன்' படத்தில் நடித்த போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சூரிக்கு பேசப்பட்ட சம்பளத்தைக் கொடுக்காமல் அதற்குப் பதிலாக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி சூரியிடம் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலாவுக்கும் தொடர்பிருப்பதாக சூரி புகாரளித்துள்ளார்.

  சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புராஜன் மற்றும் ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தனது தந்தைக்கு தொடர்பில்லை என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஷ்ணு விஷாலின் நெருங்கிய தோழியான ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அதில் அவர் கூறியிருப்பதாவது, “இந்த சமூகம் எளிதில் ஒருவரைப் பற்றி முடிவு செய்யும் நிலைக்கு மாறிவிடுகிறது. மேலும் நியாயமற்றதாக இருக்கிறது. நல்ல குடும்ப பின்னணியில் பணக்காரர் போல இருக்கும் ஒருவருடன் ஒப்பிடும் போது இன்னொருவர் குறிப்பிட்ட தோற்றத்தில் (பணக்காரராக இல்லையென்றால்) பாதிக்கப்பட்டவர்.  அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய சமூகம் பரிந்து பேச ஆரம்பித்துவிடுகிறது. ஏனெனில், அவர் போராட்டத்தைப் பற்றி பேசுவதாலும், போராடி வந்தவரைப் போல தெரிவதாலும்.

  மேலும் படிக்க: Exclusive | சூரி என்னும் சேப்டர் என் வாழ்வில் முடிந்துவிட்டது - விஷ்ணு விஷால்

  தங்களுடைய போராட்டத்தை வெளியில் சொல்லாதவர்கள். போராடியதைப் பற்றி பேசும் நபரை விட குறைவான பிரச்னைகளை சந்தித்தவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கென அடிப்படை உரிமைகள் இல்லையா?

  ஒருவர் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் இருக்கிறார் என்பதை வைத்து அவரை எப்படி நம்ப முடியும். வெள்ளையாக இருக்கும் பெண்ணை மணந்தால் அதே நிறத்தில் குழந்தைகள் பிறக்கும் என்று நினைக்கும் சமூகம் தான் இது.

  மேலும் படிக்க: Exclusive | என்னுடைய திறமை எல்லாத்தையும் தொலைத்துவிட்டேன் - நடிகர் சூரி வேதனை

  அதே சமூகம் ஒருவர் பார்க்க நன்றாக இருந்தால் முதல் பார்வையிலேயே அவரை வில்லன் எனத் தீர்மானிக்கிறது. பார்ப்பதற்கு ஓரளவு இருக்கிறார் என்பதனாலா? இது நயவஞ்சகம் இல்லையா?”  உண்மை வெளிவருதற்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டாம்” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஜூவாலா கட்டா.

  ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

  போட்டி அட்டவணை

  சூரி விவகாரத்தில் அடுத்தடுத்து கருத்துக்கள் வெளியாகிக்கொண்டே இருப்பதால், தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
  Published by:Sheik Hanifah
  First published: