நடிகர் சூரி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
COVID-19 தடுப்பூசி இயக்கம் தொடர்கையில், அதிகமான பிரபலங்கள் முன்வந்து தடுப்பூசி போடுவதை நாம் காண்கிறோம். தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் அவர்கள் உருவாக்கி வருகின்றனர். அவர்களில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள்.
இப்போது, கோலிவுட் பிரபலங்களில், தடுப்பூசி போட்ட சமீபத்தியவர் நடிகர் சூரி என்று தெரிகிறது. தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துக் கொண்ட சூரி, அதில் ஊசி போட்டு முடிந்ததும், தனது கட்டைவிரலைக் காட்டுகிறார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், தனது உடல் மாற்றத்திற்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்று வருகிறார் சூரி. இப்போது, அவர் மிகவும் மெல்லிய உடலமைப்பைக் கொண்டிருக்கிறார். பணி முன்னணியில் அவர் வரவிருக்கும் இரண்டு திட்டங்களைக் கொண்டுள்ளார். கவின் மூர்த்தி இயக்கும் ‘வேலன்’ படத்தில், சூரி மலையாள நட்சத்திரமான மம்முட்டியின் ரசிகராக நடிக்கிறார். படத்தில் அவரது பெயர் மம்மூக்கா தினேசன் என்று அழைக்கப்படுகிறது. தவிர சிவா இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்திலும் சூரி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.