வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாகும் நடிகர் சூரி!

வெக்கை நாவலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

news18
Updated: July 27, 2019, 8:04 PM IST
வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாகும் நடிகர் சூரி!
நடிகர் சூரி
news18
Updated: July 27, 2019, 8:04 PM IST
வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சூரி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட சென்னை படத்தை அடுத்து தனுஷின் அசுரன் படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். வெக்கை நாவலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெற்றிமாறன் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் நகைச்சுவை நடிகர் சூரி நாயகனாக நடிக்க, எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சீமராஜா படத்தின் போது நடிகர் சூரி சிக்ஸ் பேக் வைத்த புகைப்படங்கள் வெளியாகின. அதன் பின்னர் அவருக்கு சில படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வாய்ப்புகளை மறுத்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ பார்க்க: பாகுபலி படத்தின் கதை காப்பியா?

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...