Soori: ’2 நாள் சோர்வு, இப்போ நார்மலாகிட்டேன்’ தடுப்பூசி குறித்து நடிகர் சூரி!

தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி

சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துக் கொண்ட சூரி, அதில் ஊசி போட்டு முடிந்ததும், தனது கட்டைவிரலைக் காட்டினார்.

  • Share this:
    முதலில் லேசா வலி இருந்தது, இப்போது நார்மலாகி விட்டது என கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

    COVID-19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு, பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களைப் பகிர்ந்து, தங்கள் ரசிகர்களையும் சமூக ஊடகப் பின்தொடர்பவர்களையும் தடுப்பூசி போட ஊக்குவித்து வருகிறார்கள்.



    அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துக் கொண்ட சூரி, அதில் ஊசி போட்டு முடிந்ததும், தனது கட்டைவிரலைக் காட்டினார். பின்னர் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், ”இன்னைக்கு நானும் என் மனைவியும், பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க” எனக் குறிப்பிடிருந்தார்.

    இந்நிலையில், “நானும் என் மனைவியும் கொரோனா தடுப்பூசிபோட்டு ஆறு நாளாச்சு, எனக்கு மட்டும் இரண்டு நாள் உடல் சோர்வும், ஊசி குத்தின இடத்துல வலியும் இருந்துச்சு, இப்ப நானும் நார்மலாகிட்டேன். எல்லாரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்குங்க- உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக, நாட்டுக்காக!” என ட்வீட் செய்திருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: