முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூர்யாவால் வந்த குழப்பம்.. மூதாட்டி கொடுத்த ஷாக்.. மேடையில் சுவாரஸ்ய சம்பவத்தை சொன்ன விடுதலை நடிகர் சூரி!

சூர்யாவால் வந்த குழப்பம்.. மூதாட்டி கொடுத்த ஷாக்.. மேடையில் சுவாரஸ்ய சம்பவத்தை சொன்ன விடுதலை நடிகர் சூரி!

சூரி - சூர்யா

சூரி - சூர்யா

Viduthalai Movie : இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு சூரி கதாநாயகனாக நடித்துள்ள விடுதலை படத்தை வெற்றிமாறன் இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து உன்னோடு நடந்தா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது

விழாவில் பேசிய சூரி, படப்பிடிப்பு நேரத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார். என்னை ஷூட்டிங்கில் பார்க்க 10 நாட்களாக ஒரு வயதான அம்மா வந்து போனதாக சொன்னார்கள். என்னால் பார்க்க முடியாமலையே போனது. ஒரு நாள் உதவி இயக்குநர்கள் வந்து, அந்த அம்மாவின் வீடு பக்கத்தில்தான் இருப்பதாகவும், நேரில் சென்று ஆசிர்வாதம் வாங்கி விடுங்கள் என்று கூறினார்கள்.

நான் நேரில் சென்று அந்த அம்மாவை பார்த்தேன். அவர் என்னை ஆரத்தழுவி வரவேற்றார். வெள்ளையாக இருக்கும் நான் நேரில் கருப்பாக இருப்பதாக கூறினார். என் அப்பாவின் நடிப்புக்கு ரசிகர் என்று கூறினார். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. அவர் என்னை சிவக்குமாரின் மகன் சூர்யா என நினைத்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

நான் சூர்யா இல்லை என்றதும் அவர் கதவை சாத்திவிட்டு சென்றுவிட்டார் என நகைச்சுவையாக கூறினார். சூரியின் இந்த பேச்சைக் கேட்டு மேடையில் இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.


First published:

Tags: Actor Soori