சாணி காயிதம் படத்தை பார்த்த நடிகர் சூரி, கீர்த்தி சுரேஷுக்கு பல விருதுகள் காத்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராக்கி படத்தைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் சாணிக் காயிதம். ராக்கி அதன் வன்முறைக்காக பேசப்பட்டது. சாணிக் காயிதம் படத்தையும் வன்முறையில் தோய்த்து எடுத்துள்ளார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
தன்னையும், தனது குடும்பத்தையும் நாசம் செய்தவர்களை, அண்ணன் செல்வராகவுடன் சேர்ந்து ரிவெஞ்ச் செய்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் ஓடிடியில் நேரடி ரிலீசாக அமேசான் பிரைமில் கடந்த வெள்ளியன்று வெளியானது.
இதையும் படிங்க - விஜய் ரசிகர்களுக்கு மெகா அப்டேட்… தளபதி 66 ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிரட்டியிருந்தனர். போலீஸ் கான்ஸ்டபிளாக, தான் உண்டு, தனது வேலை உண்டு இருக்கும் கீர்த்தி சுரேஷ், சண்டை காட்சிகளிலும், பழி வாங்கும் காட்சிகளிலும் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க - தளபதி 66 அப்டேட் தந்த இசையமைப்பாளர் தமன்… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்…
செல்வராகவன் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் படு கேஷுவலாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், கேரக்டர்களை அதிகம் பேசும் படத்திலும் நடித்து வருகிறார். அவரது நடிப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருப்பது, கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சாணி காயிதம் படத்தையும், கீர்த்தியின் நடிப்பையும் பல்வேறு பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பதிவில், ‘சாணிக்காயிதம் படம் பார்த்தேன். கீர்த்தியின் நடிப்பு பார்த்து மிரண்டு விட்டேன். பல விருதுகள் உங்களுக்காக காத்திருக்கிறது தங்கச்சி. அசாத்திய உழைப்பு தந்துள்ள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சார், செல்வராகவன் சார் மற்றும் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.