ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூரி.. இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூரி.. இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் சூரி

நடிகர் சூரி

விடுதலை படத்தைத் தொடர்ந்து இணைய தொடரில் நாயகனாக நடிக்கும் நடிகர் சூரி. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விடுதலைப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க உள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

அட இவரா! விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!

இரண்டு பாகங்களாக வெளியாகும் விடுதலை படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் நடிகர் சூரி மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். அதை மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளார்.

3 மாசம் லோன் கட்டல.. ரசிகர்களுக்கு தெரியாத விஷயங்களை பகிர்ந்த குக் வித் கோமாளி மணிமேகலை!

சூரி -  விக்ரம் சுகுமாரன் கூட்டணியில் உருவாகும் அந்த திரைப்படம் இணைய தொடர் வகையில்  ஓ.டி.டியில் வெளியாக வாய்ப்புள்ளது.  வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால்,  தன்னுடைய அடுத்தடுத்தப் படங்களை மிக கவனத்துடன் தேர்வு செய்ய சூரி திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில்தான் தற்போது விக்ரம் சுகுமாரன் கதையையும் தேர்வு செய்துள்ளார் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Sreeja
First published:

Tags: Actor Soori, Kollywood, OTT Release, Tamil Cinema