• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் சூரி - வியக்க வைக்கும் வீடியோ!

ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் சூரி - வியக்க வைக்கும் வீடியோ!

சூரி

சூரி

காமெடி கதாபாத்திரங்களில் நடித்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார்

  • Share this:
    ஹீரோ போன்று பல ஸ்டைலிஷான கெட்டப்புகளில் இருக்கும் படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி.

    பரோட்டா சூரி என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சூரி, இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையின் எல்லா பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவருடைய சிறந்த நண்பர்களான சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் அவரவர் பாணியில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





    சூரி தனது திரைப்பட வாழ்க்கையை 1998-ஆம் ஆண்டு 'மறு மலர்ச்சி' என்ற படத்தில் அங்கீகரிக்கப்படாத பாத்திரத்தில் தோன்றி தொடங்கினார். செட் உதவியாளர், அப்ரண்டிஸ் மற்றும் எலக்ட்ரீஷியன் என பல வகைகளில் பணியாற்றினார். பின்னர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் படத்தில் பிரபலமான பரோட்டா காமெடியை முன்வைத்து, அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயரும் கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.



    முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த சூரி, தற்போது வெற்றிமாறன் இயக்கிவரும் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    'எல்லா கோட்டையும் அழிங்க... முதல்ல இருந்து ஆடுவோம்..!' என்று தொடங்கும் அந்த வீடியோவில் சூரியின் விதவிதமான தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள், வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: