முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சூரி அளித்த மோசடி புகார்... விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன்!

சூரி அளித்த மோசடி புகார்... விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலாவுக்கு சம்மன்!

சூரி - விஷ்ணு விஷால்

சூரி - விஷ்ணு விஷால்

காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நடிகர் சூரியின் மோசடி புகாரில் ஓய்வு பெற்ற டிஜிபி, தயாரிப்பாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சம்மன் அளிக்க திட்டமிட்டுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியதுடன், 6 மாதகாலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது.

இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை நடிகர் சூரி 2 முறை இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த விசாரணையில் வழக்கு தொடர்பாக கேட்கப்பட்ட 110 கேள்விகளுக்கு நடிகர் சூரி பதிலளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

சமந்தாவின் பாய் பிரெண்டாக ஸ்ரீசாந்த்... ட்ரெண்டிங்கில் திப்பம் தப்பம் பாடல்!

இந்த விசாரணையை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 406 நம்பிக்கை மோசடி, 420 பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாறு காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறு வழக்காக பதிவு செய்துள்ளனர்.

கே.ஜி.எஃப் 2 தயாரிப்பாளர்களுடன் சுதா கொங்கராவின் அடுத்தப்படம்!

இதையடுத்து ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு சம்மன் கொடுக்க உள்ளனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார். 2 பேரையும் நேரில் வரவழைத்து தனித்தனியாக விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Actor Soori, Actor Vishnu Vishal, Vishnu vishal