பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி, இயக்குநர் ராமுடன் இணைந்து தமிழ்-மலையாளம் என இருமொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இதன் இரண்டாவது ஷெட்யூல் ஜனவரி ஆரம்பத்தில் துவங்கியது. தற்போது அதில் நடிகர் சூரி இணைந்துள்ளார்.
பெயரிடப்படாத இந்தப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுவாரஸ்யமாக, இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் படத்தின் செட்டுகளுக்குச் சென்றார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட படங்கள்
சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
படத்தின் செட்களில் இருந்து
படங்களைப் பகிர்ந்த சூரி, "இன்று இனியதொரு தொடக்கம். இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலி-யுடன் முதல்முறையாக 'பயணிப்பதில்' பெரு மகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து விலகிய பிரஜின்... காரணம் இது தான்!
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் கீழ் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்தின் கதை ஒரு மீனவர் மற்றும் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.