முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் - 2K கிட்ஸ்கள் குறித்து பேசிய சூரி!

எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் - 2K கிட்ஸ்கள் குறித்து பேசிய சூரி!

நடிகர் சூரி

நடிகர் சூரி

2K கிட்ஸ்களை படம் பார்க்க வைப்பது சவாலாக உள்ளது. எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் என நடிகர் சூரி நகைச்சுவை பேச்சு. 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

2K கிட்ஸ்களை படம் பார்க்க வைப்பது கடினமாக இருக்கிறது என நடிகர் சூரி கூறியுள்ளார். எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள் எனவும் நகைச்சுவையாக பேசியுள்ளார். 

இயக்குனர்கள் சரண், லிங்குசாமி உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பத்திரிகையாளர் மணிபாரதி என்பவர் பேட்டரி என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அந்தப் படத்தில் செங்குட்டுவன் என்ற புதுமுகம் நடிக்க அம்மு அமிராமி நாயகியாக நடித்துள்ளார்.  அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், மோகன் ராஜா, சரண், நடிகர் சூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அதில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், 2K கிட்ஸ்களை படம் பார்க்க வைப்பது சவாலாக உள்ளது.  அவர்களை கவரும் வகையில் திரைப்படம் எடுப்பது அவசியம் அவர்கள். ஒரே சமயத்தில் திரையரங்கில் இருந்து கொண்டு இரண்டு வேலைகளை பார்க்கின்றார்கள்.  குறிப்பாக மொபைலை பார்த்துக் கொண்டே, திரைப்படங்களை பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் திரைப்படத்தை பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். அந்த அளவுக்கு கிரிப்பிங்காக திரைக்கதையை உருவாக்க வேண்டியது அவசியமாக இருக்கிறதாக தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, வசந்தபாலன் பேச்சை சுட்டி காட்டினார். எந்த படத்தை எடுத்தாலும் கலாய்க்கிறார்கள். 10 நிமிடத்திற்கு ஒருமுறை மொபைல் எடுத்து பார்த்துக் கொண்டே திரைப்படத்தை பார்க்கின்றார்கள்.  அவர்களை திரைப்படம் பார்க்க வைப்பது கடினமாக உள்ளது என தெரிவித்தார். ஆனால் பேட்டரி திரைப்படத்தின் கதை கேட்டறிந்தேன்.  அந்தப் படம் நிச்சயம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என கூறினார்.

Also read... இணையத்தில் வைரலாகும் விக்ரம் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள்!

இறுதியாக பேசிய வெற்றிமாறன், ஒரு நல்ல திரைப்படத்திற்குதான் சிறந்த ட்ரெய்லரை உருவாக்க முடியும். அந்த வகையில் பேட்டரி திரைப்படத்தின் டிரைலர் சிறப்பாக உள்ளது. இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், ஒருவேளை இந்தப்  படத்தை தன்னுடைய நிறுவன மூலம் வெளியிட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். ஆனால் தற்போது வெளியிடுபவர்கள் பெரிய நிறுவனம். நிச்சயம் நல்ல ரீச் இருக்கும் என பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Soori, Entertainment