முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோவிலுக்கு எதிரானவன் நான் இல்லை - நடிகர் சூரி

கோவிலுக்கு எதிரானவன் நான் இல்லை - நடிகர் சூரி

நடிகர் சூரி

நடிகர் சூரி

என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் மதுரை மீனாட்சியை எப்போதும் கும்பிடுபவன். அத்துடன் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது என நடிகர் சூரி விளக்கம். 

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது என நடிகர் சூரி கூறியுள்ளார். 

கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் பேசிய சூரி, நடிகர் சூர்யா நடத்திவரும் அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார்.

அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, படக்குழுவினர் பற்றியும், நடிகை அதிதி செயல்பாடுகள் குறித்தும் நகைச்சுவையாக பேசினார்.

Also read... ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து முக்கிய அப்டேட்டை தெரிவித்த ரஜினி!

அதன் பின், மதுரை பேச்சுக்கு விளக்கமளித்தார். அதில் நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் எனதான் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது என கூறினார். அத்துடன் நான் படிக்காதவன், அதன் முக்கியத்துவம் எனக்கு தெரியும் எனவும் தெரிவித்தேன் எனவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Soori, Entertainment