Home /News /entertainment /

இந்த படத்துக்கு விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை... ஜெய் பீமை பாராட்டிய நடிகர் சூரி!

இந்த படத்துக்கு விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை... ஜெய் பீமை பாராட்டிய நடிகர் சூரி!

சூரி மற்றும் சூரியா

சூரி மற்றும் சூரியா

படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

  • News18
  • Last Updated :
    சூரியாவின் ஜெய் பீம் படத்தை பார்த்து அப்படியே உறைந்து போனேன் என்று நடிகர் சூரி பாராட்டியுள்ளார்.

    நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஜோதிகா மற்றும் சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

    Also read... எனக்கு பிடிச்ச ஹீரோ இவர்தார்... வைரலாகும் விஷாலின் வீடியோ!



    இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் படம. ஜெய்பீம் அல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை. என பதிவிட்டுள்ளார்,
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Soori, Actor Suriya, Jai Bhim

    அடுத்த செய்தி