ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மறுபடி மறுபடி வருகிறேன்... விசாரணை மட்டுமே நடைபெறுகிறது - மன வேதனையில் நடிகர் சூரி!

மறுபடி மறுபடி வருகிறேன்... விசாரணை மட்டுமே நடைபெறுகிறது - மன வேதனையில் நடிகர் சூரி!

தந்தையுடன் விஷ்ணு விஷால் - சூரி

தந்தையுடன் விஷ்ணு விஷால் - சூரி

இந்த மோசடி புகாரில் தற்போது வரை 4 முறை நடிகர் சூரி சென்னை மத்திய குற்றபிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பண மோசடி வழக்கில் மறுபடி மறுபடி வருகிறேன் விசாரணை மட்டுமே நடைபெறுகிறது என்று நடிகர் சூரி தனது மன வேதனையை தெரிவித்துள்ளார்.

திரைப்பட காமெடி நடிகரான சூரி நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகார் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே மூன்று முறை நடிகர் சூரி விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று 4 வது முறையாக ஆஜரானார்.

கடந்த ஏப்ரல் மாதம்  நடிகர் சூரி 3-வது முறையாக ஆஜரான போது அவரிடம் 110 கேள்விகள் கேட்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது 4-வது முறையாக ஆஜராகியுள்ளார்.

சுமார் 2 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் ஷூட்டிங் போயிட்டு வரியான்னு கேப்பாங்க. ஆனா, இப்பலாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வரீங்களா என குடும்பத்தினர் கேட்க்கின்றனர் என வேதனையாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர். முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. இப்போ வந்தேன். இப்போதும் விசாரணை நடந்தது எனக் கூறினார்.

Also read... விஜயின் வாரிசு படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்... தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!

எதிர்தரப்புக்கு சாதகமாக விசாரணை நடைபெறுகிறுதா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, எந்த சாதகமும் வேண்டாம். விசாரணை நியாயமாக நடந்தால் போதும் என தெரிவித்த அவர் காவல்துறை, நீதிமன்றம், கடவுள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் வேறு ஒன்றும் சொல்வதிற்கில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த மோசடி புகாரில் தற்போது வரை 4 முறை நடிகர் சூரி சென்னை மத்திய குற்றபிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். ஆனால் நடிகர் சூரி குற்றம் சாட்டிய நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.,யுமான ரமேஷ் குடவாலா ஒரு முறை கூட விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Soori, Actor Vishnu Vishal