ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Vetrimaaran - Soori: வெற்றி மாறன் படத்துக்காக ஃபிட்டாக மாறிய சூரி!

Vetrimaaran - Soori: வெற்றி மாறன் படத்துக்காக ஃபிட்டாக மாறிய சூரி!

சூரி

சூரி

வெற்றி மாறன் இயக்கும் படத்திற்காக நடிகர் சூரி தனது உடலை ஃபிட்டாக மாற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    வெற்றி மாறன் இயக்கும் படத்திற்காக நடிகர் சூரி தனது உடலை ஃபிட்டாக மாற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

    இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நாள். மக்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்தும் நோக்கில் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தங்கள் வாக்கினை பதிவிட்டு வருகிறார்கள். அரசியல்வாதிகளும், திரைப்பிரபலங்களும் காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வரும் வண்ணம் இருக்கிறார்கள். சில பிரபலங்கள் அதை ட்ரெண்டாகவும் மாற்றியுள்ளனர். விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்து இணையத்தில் ட்ரெண்டானார். இதையடுத்து வாக்களிக்க சென்ற சூரி மிகவும் ஃபிட்டாகக் காணப்பட்டார்.

    வெற்றி மாறனின் படத்தில் அவர் நடிக்கும் படத்திற்கான தோற்றம் தான் இது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழு சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. பெயரிடப்படாத இந்த படத்திற்கான முக்கியமான பகுதிகளை சத்தியமங்கலம் வனப்பகுதியில் படமாக்கினர். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் பவானி ஸ்ரீ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி குறிப்பிடத்தக்க வேடத்தில் நடிக்கவுள்ளார், படத்திற்கு இசை இளையராஜா.

    வெற்றிமாறன் - சூரி படம் குறித்த மிகக் குறைந்த தகவல்களே வெளியாகியுள்ள நிலையில், இது குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. சூரியின் இந்த புதிய தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் படக்குழு தங்களுக்கு என்ன சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். இதற்கிடையே, சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்திலும் பிஸியாக இருக்கிறார் சூரி. அதில் அவர் கல்லூரி மாணவராக நடிக்கிறார். தவிர ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்திலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Soori, Director vetrimaran