விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்

விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணை நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு விஷாலின் தந்தைக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது - சூரி தரப்பு நீதிமன்றத்தில் வாதம்
சென்னை உயர்நீதிமன்றம் | நடிகர் சூரி
  • Share this:
நடிகர் சூரி சமீபத்தில் காவல்துறையில் அளித்த புகாரில், ‘நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த ‘வீரதீரசூரன்’ என்ற திரைப்படத்தில் நான் நடித்தேன். அதற்கு வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை வாங்கித் தருவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக பெற்று மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பியும் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலாவுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என நடிகர் சூரி தரப்பில் வாதிடப்பட்டது.மேலும், இந்த வழக்கில் தங்கள் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகர் சூரி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading