அஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி - வைரல் வீடியோ

அஜித் ஸ்டைலில் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்கும் சூரி - வைரல் வீடியோ
நடிகர் சூரி
  • Share this:
நடிகர் சூரி படப்பிடிப்பின் போது கிடைத்த இடைவேளையில் படக்குழுவினருக்கு சுடச்சுட பஜ்ஜி போட்டு கொடுத்து அசத்தியுள்ளார்.

நடிகர் அஜித் தான் நடிக்கும் படத்தில் பணியாற்றுபவர்களுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து அவரே பரிமாறுவார் என்றெல்லாம் அவ்வப்போது அஜித்துடன் பணியாற்றியவர்கள் தங்களது பேட்டியில் தெரிவிப்பார்கள். அதைப்போல் நடிகர் சூரி தற்போது படக்குழுவுக்கு பஜ்ஜி போட்டுக் கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சசிக்குமார், ஜோதிகா, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படப்பிடிப்புக்கு இடையே கிடைத்த நேரத்தில் அங்கிருக்கும் உணவு தயாரிக்கும் இடத்தில் நடிகர் சூரி தன் கையால் படக்குழுவுக்கு சுடச்சுட பஜ்ஜி போட்டு கொடுத்துள்ளார். அந்த வீடியோவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.


அதில், “நீங்க ஷாட்டுக்கு கூப்பிடுங்க இல்ல கூப்டாம போங்க நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்” என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.மேலும் படிக்க: சிவாஜி - கமல்ஹாசன் சாதனையை ஓவர் டேக் செய்கிறாரா சீயான் விக்ரம்?
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading