’அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட சூரி, நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார்.
’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கடந்த டிசம்பரில் படப்பிடிப்பு நடக்கையில், அதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதுபோல் மீண்டும் நிகழாமல் இருக்க கடும் கட்டுப்பாடுகளுடன் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் ஷெட்யூலில் முதல்கட்டமாக ரஜினியும், சூரியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. சூரி ரஜினியுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. அந்த அனுபவம் குறித்து பேசியிருக்கும் சூரி, "தலைவர் ஷுட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு, வேற லெவல் எனர்ஜி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உட்பட ஏராளமானவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட உள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.