ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

’நானே கடவுள், நானே பக்தர்’ - தன் கோயிலுக்கு தானே வந்த நடிகர் சோனு சூட்!

’நானே கடவுள், நானே பக்தர்’ - தன் கோயிலுக்கு தானே வந்த நடிகர் சோனு சூட்!

நடிகர் சோனு சூட்

நடிகர் சோனு சூட்

Actor sonu sood temple visit | நான் கடவுள் அல்ல, உங்களை போன்று மனிதன் தான் - நடிகர் சோனு சூட்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானாவில் தன்னை கடவுளாக கருதி கட்டிய கோவிலை நடிகர் சோனு சூட் நேரில் சென்று பார்த்தார்.

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டை மாவட்டம் டுல்மிட்டா மண்டலம் செல்மிதாண்டா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு கோயில் ஒன்றை கட்டி அதில் அவருடைய சிலையை நிறுவியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கரோனா காலத்தில் அவர் பொதுமக்களுக்கு செய்த உதவிகளுக்காக அங்கு அவருக்கு கோவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேற்று இரவு சித்தி பேட்டை வந்த சோனு சூட்டுக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து மோட்டார் சைக்கிள் ஊர்வலத்துடன் அவரை அழைத்து சென்றனர்.

இன்று காலை அவர் செல்மிதாண்டா கிராமத்திற்கு வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற கிராம மக்கள் சோனு சூட் கோவிலுக்கு சோனு சூட்டை அழைத்து சென்றனர். தன் மீது இருக்கும் அன்பு காரணமாக கிராம மக்கள் தனக்கு கட்டிய கோவிலை பார்த்த அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பொதுமக்களுடன் பேசிய அவர், நான் கடவுள் அல்ல. உங்களை போல் நானும் ஒரு மனிதன். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்ய கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கு நன்றி என்று கூறி அங்கிருந்து விடைபெற்றார்.

First published:

Tags: Sonu sood, Telangana, Temple