Home /News /entertainment /

இயக்குனர் ஷங்கர் - ராம்சரண் படத்தில் இணையும் எஸ் ஜே சூர்யா…

இயக்குனர் ஷங்கர் - ராம்சரண் படத்தில் இணையும் எஸ் ஜே சூர்யா…

எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா

முதலமைச்சரின் மகனாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தப் படம் உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகிவரும் ஆர்.சி. 15 படத்தில் எஸ் ஜே சூர்யா இடம்பெறுவார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தை வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜுவின் ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    மெர்சல், மாநாடு, டான் உள்ளிட்ட படங்களில் தனது அபாரமான நடிப்பு திறமையால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

    வாலி, குஷி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சூர்யாவை விட, நடிகர் சூர்யாவுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை எஸ். ஜே. சூர்யா சிறப்பாக பயன்படுத்தி, ஒவ்வொரு படங்களிலும் முத்திரையை பதித்து வருகிறார்.

    வரவேற்பை பெறும் விக்ரம் வேதா இந்தி ரீமேக் ட்ரெய்லர்… 24 மணி நேரத்தில் 42 மில்லியன் வியூசை தாண்டியது

    இந்த நிலையில் ராம் சரண் நடிக்கும் அவரது 15 ஆவது படத்தில் எஸ்.ஜே. சூர்யா இடம்பெறுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    ஆக்சன் -  அரசியல் சார்ந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த், ஜெயராம், நவீன் சந்திரா உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் இடம் பெற்றிருப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாகியுள்ளது.

    Manju Warrier: 44 வயதில் இளசுகளுக்கே டஃப் கொடுக்கும் மஞ்சு வாரியர்!

    இந்த படத்தில் முதலமைச்சரின் மகனாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கு சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தப் படம் உள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: SJSurya

    அடுத்த செய்தி