அகில உலக சூப்பர் ஸ்டாரின் ’சுமோ’... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட பிரபல இயக்குனர்!

நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் சுமோ படத்தில் நடிகர் சிவா திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார்.

news18
Updated: August 1, 2019, 12:38 PM IST
அகில உலக சூப்பர் ஸ்டாரின் ’சுமோ’... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட பிரபல இயக்குனர்!
சுமோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
news18
Updated: August 1, 2019, 12:38 PM IST
‘தமிழ்ப்படம் 2’ படத்தை அடுத்து நடிகர் சிவா நடிக்கு சுமோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ்ப்படம் 2 படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தில் நடித்துள்ளார் சிவா.

இந்தப் படத்தை அடுத்து பிப்ரவரி 14 படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் உருவாகும் சுமோ படத்தில் சிவா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். இவர்களுடன் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் சிவா திரைக்கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ளார். மேலும் சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில் இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Loading...




போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் வெங்க்ட் பிரபு படக்குழுவிற்கும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவிற்கும் படம் வெற்றியடைய வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

Also see...

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...