ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'குளிருக்காக சாக்குபைகளை போர்த்திக்கொண்டு படுத்தேன்' - சிவக்குமார் உருக்கமான பேச்சு

'குளிருக்காக சாக்குபைகளை போர்த்திக்கொண்டு படுத்தேன்' - சிவக்குமார் உருக்கமான பேச்சு

நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார்

சிறுவயதில் மழைகாலத்தில் குளிருக்காக சாக்குபைகளை போர்த்திக் கொண்டு படுத்ததாக உழவன் விருது வழங்கும் விழாவில் நடிகர் சிவக்குமார் உருக்கமாக பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

நடிகர்கள் கார்த்தி மற்றும் சூர்யாவின் தந்தை சிவக்குமார். திரைத்துறையில் பல ஆண்டுகளால கோலோச்சிய சிவக்குமார் 1965ம் ஆண்டில்தான் சினிமாவில் அறிமுகம் ஆனார். திறமை, விடாமுயற்சி என தொடர்ந்து பயணித்து சிவக்குமார் 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து தள்ளினார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்த சிவக்குமார் இறையியல், யோகா, மூச்சுப்பயிற்சி போன்ற விஷயங்கள் குறித்தும் அதிகம் பேசி வருபர். தற்போது திரையுலகைவிட்டு விலகி ஓய்வில் இருக்கும் சிவக்குமார் அவ்வப்போது சில விழாக்களில்மட்டும் பங்கேற்று வருகிறார்.

சென்னை தியாகராய நகரில், நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேசன் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவக்குமார், சிறுவயதில் தான் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார். மேலும் பெண்களை படைப்புக் கடவுள் என்றும் புகழ்ந்த அவர், தான் 10 மாத குழந்தையாக இருக்கும் போதே தந்தையை இழந்து விட்டதாகவும், தனது தாய் தான் தன்னை வளர்த்ததாகவும், அன்று மட்டும் தனது தாய் இல்லா விட்டால், இன்று சூர்யா, கார்த்தி எல்லாம் கிடையாது என்று உருக்கமாக பேசினார்.

மழைகாலத்தில் குளிருக்காக சாக்குபைகளை போர்த்திக் கொண்டு படுத்ததாகவும், மின்சாரம் இல்லாத கிராமத்தில் தனது தாயின் அரவணைப்பில் தான் வளர்ந்ததாகவும் மேடையில் உருக்கமாக குறிப்பிட்டார்.

First published:

Tags: Actor Karthi, Actor Sivakumar, Entertainment, Tamil Cinema