Home /News /entertainment /

தமிழ் திரையை அலங்கரித்த நடிப்பின் ஓவியர் சிவக்குமார்!

தமிழ் திரையை அலங்கரித்த நடிப்பின் ஓவியர் சிவக்குமார்!

நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார்

’திருமால் பெருமை’ , உள்ளிட்ட புராண படங்களில் காட்சி தந்து அருளினார் சிவக்குமார்.

  70-களின் தமிழ் சினிமாவில் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட பேரழகன் நடிகர் சிவக்குமாரின்  சினிமா பயணத்தை பற்றிய தொகுப்பு

  இளைஞனாகவும் இல்லாமல் குழந்தையாகவும் இல்லாமல் இடைப்பட்ட பருவத்தில் சினிமாவில் நுழைந்த சிவக்குமாருக்கு முதலில் கிடைத்தது முருகபிரான் வேடம். சிவப்பு நிறம், பாந்தமான முகம், முத்துப்பல் சிரிப்பு, பூரிப்பான தேகம் என பூசி மெழுகிய அழகான வசீகரமான முருகனாக ‘கந்தன் கருணை’, ’சரஸ்வதி சபதம்’, ’திருமால் பெருமை’ , உள்ளிட்ட புராண படங்களில் காட்சி தந்து அருளினார் சிவக்குமார்.

  ’திருமலை தென்குமரி’, ’நவகிரகம்’, ’அரங்கேற்றம்’, ’ராஜராஜ சோழன்’, ’பொண்ணுக்கு தங்க மனசு’ என எம்ஜிஆர்- சிவாஜி என்ற இரு மலைகளுக்கிடையே சிறு மடுவாய் வளர்ந்தார் சிவக்குமார். ‘ பத்ரகாளி’ திரைப்படத்தில் ’கண்ணன் ஒரு கை குழந்தை’ பாடலில் சிவக்குமாரையும் …. ”சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படத்தில் ஜெயசித்ரா, ஸ்ரீவித்யா, சுபா என 3 இளம் கதாநாயகிகளின் நாயகனாக நடித்த இளமை ததும்பும் துள்ளலான சிவக்குமாரையும் பார்த்து தமிழ் சினிமாவும் அவரை காதலித்தது.

  என்னை மன்னித்து விடு.. கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி கேப்ரில்லா!

  70-களின் இளம் நாயகனாக வலம் வர தொடங்கினார் சிவக்குமார். 1976ம் வருடம் வெளிவந்த ’அன்னக்கிளி’ யில் தியாகராஜன் என்ற கதாபாத்திரத்தில் வெள்ளை மனது வாத்தியாராக வந்து, சுஜாதாவின் அன்பை பெற்றது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார் சிவக்குமார்.  அதுவரையில் நகரத்து இளைஞனாகவும், நாகரிகமான இளைஞனாகவுமே திரையில் தோன்றிய சிவக்குமார் ‘செம்பட்டையன்’ என்ற கதாபாத்திரத்தில் முழுக்க ஒரு அழுக்கான, படிப்பறிவே இல்லாத ஒரு இளைஞனாக நடித்த திரைப்படம் ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’. ஊரில் எடுப்பார் கைப்பிள்ளையாக…. தன் மனைவியை உயிராய் நேசித்து ஏமாறும் சிவக்குமாரின் வெள்ளந்தி நடிப்பில் கண்ணீரோடு கரைந்து போனார்கள் ரசிகர்கள்.

  நடிப்பா, இயக்கமா, இசையா என சிவக்குமார், கே பாலசந்தர், இளையராஜா மூவரும் போட்டிப்போட்டு தங்களது பங்களிப்பை அளித்த திரைப்படம் ’சிந்து பைரவி’. ஜேகேபி என்ற கதாபாத்திரத்தில் இன்னிசை சக்கரவர்த்தியாக வாழ்ந்திருந்தார் சிவக்குமார். இசையில் ஞானமாக விளங்கும் சிந்துவா, இல்லற வாழ்வில் அன்பாக இருக்கும் பைரவியா என்ற முடிவுக்குள் வரமுடியாமல் தவிக்கும் உணர்ச்சி போராட்டத்தில் தண்ணித்தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டியானார் சிவக்குமார்.

  ஒரு எபிசோடுக்கு 2 லட்சமா? சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தீயாய் பரவும் தகவல்!

  அண்ணன் தங்கை பாசத்தை சொன்ன மற்றுமொரு பாசமலரான ’பாசப்பறவைகள்’. ’ஏணிப்படிகள்’.. ’ஆட்டுக்கார அலமேலு’. ’பிரேம பாசம்’..’பொன்னுமணி’.. ’பசும்பொன்’… ’நாட்டுப்புறப்பாட்டு’….. ’இனி ஒரு சுதந்திரம்’… ’மனிதனின் மறுபக்கம்’…. ’ஒருவர் வாழும் ஆலயம்’ .. உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையை அலங்கரித்த சிவக்குமார் நடிப்பின் ஓவியன் என சொன்னால் அது மிகையல்ல.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Actor Sivakumar, Kollywood, Tamil Cinema

  அடுத்த செய்தி