Home /News /entertainment /

பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களை விவரிக்கும் நடிகர் சிவக்குமார்… கவனம் ஈர்க்கும் வீடியோ

பொன்னியின் செல்வன் கதாப்பாத்திரங்களை விவரிக்கும் நடிகர் சிவக்குமார்… கவனம் ஈர்க்கும் வீடியோ

பொன்னியின்செல்வன் கேரக்டர்கள்

பொன்னியின்செல்வன் கேரக்டர்கள்

இன்று மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் ட்ரெய்லர்வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பொன்னியின் செல்வன் கேரக்டர்களை நடிகர் சிவக்குமார் விவரிக்கும் வீடியோ ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.

    கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

    பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

    Rendagam Tamil Movie Trailer | இணையத்தில் கவனம் பெறும் அரவிந்தசாமியின் ரெண்டகம் படத்தின் ட்ரெய்லர்!

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் முதன்மை கேரக்டர்களை விவரிக்கும் நடிகர் சிவக்குமாரின் வீடியோ ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது.



    பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி பாக்கணுமே’ என்ற பாடல் வெளியாகி, பலரின் காலர் ட்யூனாக மாறியது.

    Bigg Boss Tamil 6 : விக்ரம் வெற்றிக்கு பிறகு பிக் பாஸில் கமல்.. வேட்டை வேற மாறி இருக்க போகுது!

    இதற்கடுத்து பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ’சோழா சோழா’ என்ற இரண்டாவது பாடல் வெளியானது. கடந்த வாரம் அதன் மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது.



    இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் பாடல் மற்றும் ட்ரெய்லர்வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ponniyin selvan

    அடுத்த செய்தி