Home /News /entertainment /

குருதி ஆட்டம் படத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

குருதி ஆட்டம் படத்தை பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

குருதி ஆட்டம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். 

    8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் படம் குருதி ஆட்டம். பரதேசி, இமைக்கா நொடிகள் தவிர எந்த ஹிட்டும் இல்லாத அதர்வா குருதி ஆட்டத்தை பெரிதும் நம்பி இருந்தார்.

    குருதி ஆட்டம் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.



    இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதி தள்ளிப் போனது, இந்நிலையில், 'குருதி ஆட்டம்' படத்தை ஆகஸ்ட் 5-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    Also read... விருமன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும் இயக்குநர் ஷங்கர்

    இந்நிலையில் குருதி ஆட்டம் திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் முருகானந்தம் உள்ளிட்ட படக்குழுவினை பாராட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, Sivakarthikeyan

    அடுத்த செய்தி