கொரோனா: சினிமா தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி

கொரோனா: சினிமா தொழிலாளர்களுக்கு சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி
சிவகார்த்திகேயன்
  • Share this:
படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சினிமாதொழிலாளர்களுக்கு உதவ நடிகர் சிவகார்த்திகேயன் ரூ .10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த 19-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 25 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட பெஃப்சியில் தினசரி 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இன்று திரைப்படத்துறையில் நல்ல நிலையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

இதுகுறித்து ஆர்.கே.செல்வமணி விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் பெஃப்சி ஊழியர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால் அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால் ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் ரு.1250 என கணக்கு வைத்தால் ரூ.2 கோடி ஆகிறது.


கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர். வாழ்வு அளிப்பீர். நிதி அளிப்பீர் என கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
முன்னதாக சிவக்குமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: தமிழகத்தில் 144 தடை உத்தரவு... என்னென்ன இயங்கும்? என்னென்ன இயங்காது?
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்