ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெங்கட் பிரபு பட விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்

வெங்கட் பிரபு பட விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

வெங்கட் பிரபு நாக சைத்தன்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் துவக்க விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வெங்கட் பிரபு இயக்கும் தெலுங்கு திரைப்படத்தின் துவக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு தமிழ்,  தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார்.  அதில் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்து படப்பிடிப்பு வேலைகள் துவங்கியுள்ளன.

நாக சைத்தன்யாவின் 22-வது படமாக உருவாகும் அந்தப் படத்திற்கான துவக்க விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் பிரபல தெலுங்கு திரை பிரபலங்களான ராணா, இயக்குநர் போயபதி சீனு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

அதேபோல் தமிழ் திரையில் இருந்து   நடிகர் சிவகார்த்திகேயன், நாகசைதன்யா -  வெங்கட்பிரபு திரைப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் வெங்கட்பிரபு இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படத்திற்கான வேலைகள் அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் வெங்கட்பிரபு பட விழாவில் கலந்துகொண்டு சிவகார்த்திகேயன் வாழ்த்தியுள்ளார்.

Also read... ஜெயிலர் படம் ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல்!

வெங்கட்பிரபு -  நாகசைதன்யா இணையும் படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார்.  அதேபோல் யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைக்க உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sivakarthikeyan, Venkat Prabhu