ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனைவியுடன் வந்து பிரின்ஸ் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் - உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

மனைவியுடன் வந்து பிரின்ஸ் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் - உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சென்னை கிழக்கு மாவட்டம் சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆளுயற மாலை அணிவித்து ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டாடி மகிழ்ந்தனர்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை ரோகினி திரையரங்கில் மனைவியுடன் வந்து ரசிகர்களுடன் சுமார் 1 மணிநேரம் பிரண்ட்ஸ் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் கண்டுகளித்தார்.

  சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் பிரின்ஸ் திரைபடத்தைகான கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் ரோகினி திரையரங்கிற்கு வந்தனர். இங்குள்ள நான்கு திரைகளில் ஒரே நேரத்தில் அதிகாலை முதல் காட்சிகள் வெளியிடப்பட்டது.

  திரைப்படம் தொடங்கிய 15 நிமிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் ரோகினி திரையரங்கில் பால்கனியில் பிரின்ஸ் திரைப்படத்தை கண்டுகளித்தார்.

  சென்னை கிழக்கு மாவட்டம் சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஆளுயற மாலை அணிவித்து ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் திரையரங்கில் உள்ளே சிவகார்த்திகேயன் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

  சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் ஆகிய திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகின.

  இதில் பிரின்ஸ் திரைப்படம் சுமார் 475 திரையரங்குகளுக்கு அதிகமாகவும், சர்தார் திரைப்படம் 400  திரையரங்குகளிலும் வெளியிடப்படுகிறது.  இதற்கான முன்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆனால் எப்போதும் நடக்கும் முன்பதிவை விட இந்த முறை மிகக் குறைந்த அளவில் முன்பதிவு நடைபெற்று இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

  குறிப்பாக, 30 சதவீதம் என்ற அளவில் தான் முன்பதிவு நடைபெற்றிருக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர்.  தீபாவளி பண்டிகை சமயத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும். அதற்கான வரவேற்பும் அதிக அளவில் இருக்கும்.

  Also read... Prince Movie Review: தீபாவளி ரேசில் ஜெயித்ததா பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ஃபார்முலா வெற்றியா, படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம்!

  ஆனால் இந்த முறை முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் அல்லாமல், இரண்டாம் பட்டியலில் உள்ள சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே வெளியாகின்றன.  இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கான முன்பதிவு மிகக் குறைந்த அளவில் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

  ரோகிணி திரையரங்கில் பிரின்ஸ் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். இதுவரை பார்த்தவரையில் பிரின்ஸ் திரைப்படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருப்பதாகவும். முழு திரைப்படத்தையும் பார்த்துவிட்டு நான் கருத்து கூறுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

  செய்தியாளர்: கன்னியப்பன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Sivakarthikeyan