Home /News /entertainment /

சிவகார்த்திகேயனின் 22வது பட டைட்டில் வெளியானது… வரவேற்பை பெறும் அறிவிப்பு வீடியோ

சிவகார்த்திகேயனின் 22வது பட டைட்டில் வெளியானது… வரவேற்பை பெறும் அறிவிப்பு வீடியோ

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் 22வது திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

    சிவகார்த்திகேயன் நடிக்கும் 22-வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    பிரண்ட்ஸ் படத்தை தொடர்ந்து மடோன்னே அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான அறிவிப்பை ஜூன் 28-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் அறிவிக்கவில்லை.

    அதேபோல் ஜூலை 8-ஆம் தேதி அறிவிப்புடன் படத்தை தொடங்குவது என முடிவெடுத்தனர். அந்த தேதியில் அறிவிக்க முடியவில்லை. இதற்காக சில காரணங்கள் கூறப்பட்டன இந்த நிலையில் இன்று காலை 10.10 மணிக்கு மாவீரன் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

     

    ஷாருக்கான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா விஜய்? புதிய தகவலால் பரபரப்பு

    மாவீரன் படத்திற்கான அறிவிப்பை தெலுங்கு முன்னணி நட்சத்திரம் மகேஷ் பாபு இன்று வெளியிட்டுள்ளார்.


    டைட்டில் அறிவிப்பு தொடர்பாகவெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    மாவீரன் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    இந்த நிலையில் நாளை கலை 10.10 மணிக்கு மாவீரன் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். இதற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. மாவீரன் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு - சென்னை உயர் நீதிமன்றம்

    டான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகி வருகிறது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையில் அயலான் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இந்தாண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி