• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் சிவாஜி கணேசனின் மறக்க முடியாத சூப்பர் ஹிட் பாடல்கள்

நடிகர் சிவாஜி கணேசனின் மறக்க முடியாத சூப்பர் ஹிட் பாடல்கள்

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

  • Share this:
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 93-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி.



    சிவாஜி நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற தேச தலைவர்களின் பாத்திரங்களை ஏற்றுத் திறம்பட நடிக்க செய்தார்



    புராணகால கடவுள்கலான அனைத்து கடவுளின் கதாபத்திரங்களில் நடித்துள்ளார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் கந்தன் கருணை, திருமால் பெருமை மேலும் திரைப்படத்தில் இவர் சிவபெருமாளாக நடித்தபோது அந்த லிங்கமாக பார்த்த மக்கள்யாவும் சிவபெருமாளுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழ பெற்றவர்.


    திரையில் இவர் தோன்றிய பிறகு நடிக்க வந்த எல்லா நடிகர்களிடமும் தெரிந்தோ தெரியாமலோ இவருடைய தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. அந்தவகையில் நடிப்பு எனும் கலையின் மூலம் சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: