• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‪நினைவு நாளில் சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்துக்கு குடும்பத்தினர் மரியாதை

‪நினைவு நாளில் சிவாஜி கணேசனின் திருவுருவப் படத்துக்கு குடும்பத்தினர் மரியாதை

நடிகர் பிரபு

நடிகர் பிரபு

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 19-வது நினைவு நாளையொட்டி அவரது குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தனக்குப் பின் திரைத்துறைக்கு வந்தவர்களுக்கு நடிப்பு ஆசானாகவும் விளங்கியவர் சிவாஜி கணேசன். தனது நடிப்புத் திறமையால் தமிழகம் தாண்டி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவர் நடித்த படங்கள் அந்தக் காலத்திலேயே வசூலைக் குவித்து சாதனை படைத்தன.

நடிப்புக்கு இலக்கணமாக வலம் வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமானார். இன்று அவரது 19-வது நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் தனது தந்தையின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.





தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் இந்த நாளில் சிவாஜியைப் போற்றி சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: