ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘பார்ட்டிக்கு செல்லாத, சிகரெட் பிடிக்காத நல்ல நடிகர் அதர்வா’ – நடிகர் சிங்கம்புலி பாராட்டு

‘பார்ட்டிக்கு செல்லாத, சிகரெட் பிடிக்காத நல்ல நடிகர் அதர்வா’ – நடிகர் சிங்கம்புலி பாராட்டு

அதர்வா - சிங்கம் புலி

அதர்வா - சிங்கம் புலி

சற்குணம் இயக்கத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள "பட்டத்து அரசன்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாக்கு போடாத,சிகிரெட் பிடிக்காத, பார்ட்டிக்கு சென்றதால் தலைவலி என்று கூறாத ஒரு நல்ல நடிகர் அதர்வா தான் என்று நடிகரும், இயக்குனருமான சிங்கம் புலி பாராட்டியுள்ளார்.

  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் லைக்கா தயாரிப்பில் அதர்வா,ராஜ்கிரண், ஹாசிக்கா  ரங்கனா உள்ளிட்டோர் நடிப்பில்,இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள "பட்டத்து அரசன்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

  இதில் நடிகர்கள் அதர்வா,ராஜ்கிரண், ஹாசிக்கா,சிங்கம்புலி,ஜெய பிரகாஷ், ஆர்.கே சுரேஷ் பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

  இயக்குனர் சற்குணம் பேசியதாவது- ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கபடி ஆடியதை நேரில் பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன், இந்த குடும்பம் கபடி ஆட கட்டாயம் ஒரு காரணம் இருக்கும் என நினைத்து அவர்களை தேடி நேரில் சென்று இந்த கதையை உருவாகினேன்.

  ’வாரிசு’ பட நடிகை ராஷ்மிகாவின் கவனம் பெறும் படங்கள்..!

  பொத்தாரி என்ற ஒரு நிஜ மனிதரின் கதாபாத்திரத்தை  தான் ராஜ்கிரணுக்கு வைத்துள்ளேன்.ராஜ்கிரண் இதில் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார் அவர் மூன்று தோற்றங்களில் நடிக்கும் முதல் படும் என நினைக்கிறேன்.அவரின் கதாபாத்திரத்திற்கு நீண்ட தாடி முடியை உண்மையாகவே வளர்த்தார்.நான் என் படத்தை காப்பி அடித்து எடுப்பது இல்லை என் மண்ணில் இருந்து எடுக்கிறேன்.

  இவ்வாறு கூறினார்.

  நடிகரும், இயக்குனருமான சிங்கம் புலி கூறுகையில், ‘நடிகர் விமலுடன் பேசும்போது சரிபாதி நேரம் இயக்குனர் சற்குணம் பற்றி பேசுவேன். இவருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய ஆசை, பணத்திற்க்காக அல்ல நல்ல இயக்குனர் என்பதால், அந்த வாய்ப்பு இந்த படத்தில் அமைந்தது. 30 நாட்கள் தஞ்சாவூர் செல்ல வேண்டும் என்றனர் உடனே சரி என புறப்பட்டோம்.

  பாலிவுட் நடிகை கியாரா அத்வானியின் வைரல் போட்டோஸ்

  ராஜ்கிரண் வந்ததும் தான் படம் வேறு ஒரு தளத்திற்கு சென்றது. ராஜ் கிரண் எப்போதும் தன்னுடைய கதாபாத்திரத்திலேயே இருப்பார். நாங்கள் தின்னிபயலாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தோம்,தூரத்தில் இருந்து பார்க்கையில் படத்தை தூக்கி நிறுத்தி விடுவார்கள் என்பதைபோல தெரியும் ஆனால் அப்படி இல்லை என காமெடியாக பேசினார்.

  92 காலங்களில் ஒரு கதையை எடுத்துக்கொண்டு பல கதாநாயகர்களிடம் சென்றோம் அதில் மொட்டையடிக்க வேண்டும் என்பதால் நிராகரித்தனர் ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனே நடிக்கிறேன் என்றவர் தான் அதர்வாவின் அப்பா முரளி அப்படி ஒரு மனிதர், இப்படி ஒரு நல்ல மனிதரின் மகன் மிகப்பெரிய நாயகனாக வரவேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

  பாக்கு போடாத,சிகிரெட் பிடிக்காத, பார்ட்டிக்கு சென்றதால் தலைவலி என்று கூறாத ஒரு நல்ல நடிகர் அதர்வா தான்.’ என்று கூறினார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Atharvaa