Simbu: குக் வித் கோமாளி கனி வீட்டில் காரக்குழம்பை ருசித்த சிம்பு!

கனி - சிம்பு

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி திருவின் வீட்டுக்கு சென்று காரக்குழம்பை ருசி பார்த்திருக்கிறார் நடிகர் சிம்பு.

  • Share this:
    குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் கனி திருவின் வீட்டுக்கு சென்று காரக்குழம்பை ருசி பார்த்திருக்கிறார் நடிகர் சிம்பு.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-வது சீசன் சமீபத்தில் முடிந்தது. இதில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ‘குக் வித் கோமாளி சீசன் 2’ டைட்டிலை கனி வென்றார். இவர் ஒரு காரக்குழம்பு ஸ்பெஷலிஸ்டும் கூட.



    குக் வித் கோமாளி இறுதிப் போட்டிக்கு சிம்பு சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த நிலையில், நேற்று கனியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார் சிம்பு. அவருடன் தொகுப்பாளர் ரக்‌ஷன், நடிகர் மஹத் உள்ளிட்டோரும் சென்றனர்.

    அந்தப் படங்களை ட்விட்டரில் பகிர்ந்த கனியின் கணவர் இயக்குனர் திரு, கனியின் காரக்குழம்பு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: