ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வெறியோடு வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள் - சிம்பு அறிக்கை

வெறியோடு வெற்றியை தேடி தந்திருக்கிறீர்கள் - சிம்பு அறிக்கை

சிம்பு

சிம்பு

நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது, என சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள் என மாநாடு பட வெற்றியைக் குறித்து நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

  கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் ரசிகர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

  இந்நிலையில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறைவன் மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மிக அழகாக உழைத்த படம் 'மாநாடு'.

  எப்படியாவது என்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட வேண்டும் என்ற என் எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளது.

  ‘மாநாடு’ படம் உலகம் முழுக்க மிகப் பெரும் வெற்றியை அள்ளியெடுத்துள்ளது.

  இதற்குக் காரணமான என் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அற்புதமான இயக்கத்தைத் தந்த வெங்கட் பிரபு, அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், 'மாநாடு' படக்குழு, என் தாய், தந்தை, வெளியிட்ட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள், என் ரத்தமான அன்பு ரசிகர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் மிகப் பெரிய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

  நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் என் அத்தனை உணர்வுகளையும் அடக்கிவிட முடியாது. ஆனால், பதிலுக்குத் தெரிவிக்க வேறு வார்த்தைகள் இல்லையே...

  ஆடியோ விழாவில் நான் சிந்திய சிறு துளிகளைத் தரையில் விழவிடாமல் தாங்கிக்கொண்ட உங்கள் அன்பிற்குள் நான் அடங்கி மகிழ்கிறேன். வெறியோடு உலகம் முழுக்க வெற்றியைத் தேடித் தந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் வணக்கங்களும், வாழ்த்துகளும்!” எனத் தெரிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Simbu, Tamil Cinema