பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம் - சிம்பு அதிரடி அறிவிப்பு

நடிகர் சிம்புவுக்கு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம் - சிம்பு அதிரடி அறிவிப்பு
சிம்பு - நடிகர்
  • News18
  • Last Updated: November 15, 2018, 3:48 PM IST
  • Share this:
நடிகர் சிம்புவுக்கு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் சிம்பு தற்போது அத்திரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு பட ரீமேக்கில் நடித்து வருகிறார். வந்தா ராஜாவாதான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். இந்தப் படத்தில் மகத் மற்றும் கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்ட நிலையில் பொங்கலுக்கு படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடிகர் சிம்புவினால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை திரும்பக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியானது.


இந்த விவகாரத்தில் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக நிற்பதாக சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் சிம்பு, “எனது ரசிகர்களுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் ஓர் அழுத்தமான வேண்டுகோள். திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வதந்தாதீர். எந்த ஒரு தனி நபரின் முடிவும் நம்மை ஓரங்கட்டிவிட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது குழு உறுப்பினரால் கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். அதனால் பதற்றப்பட வேண்டாம். யாரையும் குறிவைத்து விமர்சிக்க வேண்டாம். எப்போதும் அன்பை பரப்புங்கள். உங்களது தொடர் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நாம் நமது கடமையைச் செய்வோம் தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு எப்படியும் திரைக்கு வருவோம்" என்று கூறியுள்ளார்.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

Also Watch:
First published: November 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading