• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Simbu: 'என்னை பாத்துக்கோங்க’ மாநாடு இசைவெளியீட்டு விழாவில் கண்ணீர் சிந்திய சிம்பு

Simbu: 'என்னை பாத்துக்கோங்க’ மாநாடு இசைவெளியீட்டு விழாவில் கண்ணீர் சிந்திய சிம்பு

சிம்பு

சிம்பு

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள மாநாடு படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

  • Share this:
    மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.



    அப்போது பேசிய சிம்பு, “எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். படத்தை வெளியிட விடாமல் நிறைய பேர் தடுக்கிறார்கள். பிரச்சனைகள் எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களான நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அழுதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: