Home /News /entertainment /

சிறந்த நடிகருக்கான SIIMA விருதைப் பெற்ற சிம்பு… மாநாடு படத்திற்காக வழங்கப்பட்டது

சிறந்த நடிகருக்கான SIIMA விருதைப் பெற்ற சிம்பு… மாநாடு படத்திற்காக வழங்கப்பட்டது

SIIMA விருதைப் பெறும் சிம்பு.

SIIMA விருதைப் பெறும் சிம்பு.

மாநாடு படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்தார். ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிறந்த நடிகருக்கான SIIMA விருதை மாநாடு படத்திற்காக சிம்பு பெற்றுக்கொண்டார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

    சிம்புவுக்கான விருதை காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி வழங்கினார். தென்னிந்திய படங்களுக்கான சர்வதேச விருதுகள் (South Indian International Movies Award) வழங்கும் விழா பெங்களூரில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய இரு தினங்களாக நடைபெற்றது.

    இதில் தென் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு திரைத்துறையினரும், பாலிவுட்டை சேர்ந்த கலைஞர்களும் பங்கேற்றனர். விழாவின்போது நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை தவிர்த்தது ஏன்? நடிகை அமலா பால் விளக்கம்…

    கமல்ஹாசன், அல்லு அர்ஜுன், ரன்வீர்சிங், சிவகார்த்திகேயன், பூஜா ஹெக்டே, ரித்திகா சிங் உள்ளிட்டோர் இந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்றனர்.

    இந்நிலையில் சிறந்த நடிகருக்கான விருது மாநாடு படத்திற்காக சிம்புவுக்கு வழங்கப்பட்டது. இதனை காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படத்தை இயக்கிய விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி சிம்புவுக்கு வழங்கினார்.



    இதேபோன்று நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை பிரியங்கா மோகன் உள்ளிட்டோருக்கும் சைமா விருதுகள் வழங்கப்பட்டன.

    Vikram: பணியாளர் வீட்டு திருமணத்தில் கலந்துக் கொண்ட விக்ரம்!

    கடந்த சில ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், மாநாடு படத்தின் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்தார். ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து குறிப்பிடத்தக்கது.

    தற்போது சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளன. தற்போது இந்தப் படத்திற்கான டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Simbu

    அடுத்த செய்தி