வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாவது தொடர்பாக டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர். சிலம்பரசனை வைத்து அன்பானவன், அசராவதவன், அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருவதாகவும் கூறி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த பிறகு டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உஷா, ‘தாங்கள் மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தொடர்ச்சியாக சிம்பு நடித்து வரும் படங்களுக்கு ரெட் கார்டு போடுகிறார்கள்.
தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். சிம்புவின் மாநாடு படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், ‘தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் சிம்பு கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டபஞ்சாயத்து செய்துவரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்துரு பிரகாஷ் ஜெய்ன், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்த கட்டபஞ்சாயத்து கும்பலையும் ரெட்கார்டு போடும் கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.
இது மாதிரியான கட்டப்பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது. இந்த கட்டபஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டுகொள்வதில்லை. நான், சிம்புவுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்த பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சினையை இத்தோடு விடப்போவதில்லை. டெல்லி வரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்’என்று தெரிவித்தாMaanaர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Manadu, Simbu, T Rajendar