தயாரிப்பு, இயக்கம், நடிப்பு எல்லாமே நான் தான்...! சிம்புவின் 'மகா மாநாடு' பிளான்

தயாரிப்பு, இயக்கம், நடிப்பு எல்லாமே நான் தான்...! சிம்புவின் 'மகா மாநாடு' பிளான்
சிம்பு
  • News18
  • Last Updated: August 14, 2019, 2:00 PM IST
  • Share this:
மாநாடு திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சிம்பு, விரைவில்  ‘மகா மாநாடு’ என்ற படத்தை தயாரித்து இயக்கி நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார்.


பிரேம்ஜி, சிம்புவுடன் வெங்கட் பிரபு


அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்புத்தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார்.

தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது.எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறேன் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.

அதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்துய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

வெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநாடு படம் கைவிடப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து பணியாற்றமுடியவில்லை. எல்லாவற்றிற்கும் காலம் மிக முக்கியமானது. தயாரிப்பாளர் அனுபவித்த மனரீதியிலான மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களால் அவரது முடிவுக்கு மரியாதை செலுத்த வேண்டியது கடமை” என்றார்.

இந்நிலையில் மகா மாநாடு என்ற படத்தை தானே தயாரித்து இயக்கி, நடிக்கவும் சிம்பு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் ரூ.125 கோடி செலவில் 5 மொழிகளில் படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வீடியோ பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்துக்கு குவியும் பாராட்டுகள்!

First published: August 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்