ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை சினிமா நடிகர் நடிகைகள் என்றாலே அவர்கள் உடுத்தும் ஆடைகள்,கைகடிகாரம் கைப்பைகள் ,காலணிகள் முதல் ஷூக்கள், கார்கள் என பொது இடங்களிலும்,பொது நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் வருகின்ற போது அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் இருக்கும், உற்று கவனிக்கப்படும்.
அதே சமயத்தில் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் விலை உயர்ந்தவையாக இருக்கும். சாமானியர்களுக்கு கனவாக இருப்பதெல்லாம் சினிமாவில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையாகவே இருப்பதே சினிமாவின் சிறப்பு.
இதையும் படிங்க.. இயக்குனராக ஒரே வருடத்தில் நான்கு ஹிட் கொடுத்த பாக்யராஜ்
விதவிதமான ஸ்டைல்களில் சினிமாவில் தோன்றும் நடிகர் நடிகைகள் ரசிகர்கள் முன்னிலையிலும் ஸ்டைலாக இருக்க பிராய்தனப்படுகிறார்கள். தங்களை ஸ்டைலாக காட்டிக் கொள்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு சினிமாவில் யாரும் விதிவிலக்கல்ல.
இதையும் படிங்க.. தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார்.. என்ன விஷயம் தெரியுமா?
அப்படிதான் நடிகர் சிம்பு அணிந்த கோட்(jacket) ஒன்று காண்போர் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிம்பு பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள ஜாக்கேட் மிக ஸ்டைலாக உள்ளது.
என்ன வகை கோட்(jacket) எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது விலை குறித்த விவரங்களை நாம் அலசிய போது சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.
இந்த ஜாக்கெட் உலகின் முன்னணி ஃபேஷன் நிறுவனமான இத்தாலி நாட்டைச் சேர்ந்த டோல்ஸ் & கபானா dolce and gabbana தயாரிப்பாகும். கருப்பு நிறத்தில் நடிகர் சிம்பு அணிந்த கோட் (jacket) Nylon னால் தயாரிக்கப்பட்டது. அணிபவர்கள் அணிந்திருப்பதே உணராத வகையில் மிக நேர்த்தியாக ,மென்மையாக நீடித்து உழைக்கும் வகையிலான அதன் விலை இந்திய மதிப்பில் 1லட்சத்து 62ஆயிரத்து 885 ரூபாயாகும்.உலகின் தலைச்சிறந்த டோல்ஸ்,கபானா நிறுவனத்தின் இத்தயாரிப்பு சிறப்பானதொரு தயாரிப்பு என்பதால் இந்த jacket விலை லட்சங்களில் உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.