ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த சிம்பு!

தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதீங்க... ரசிகர்களிடம் கோரிக்கை வைத்த சிம்பு!

சிம்பு

சிம்பு

இயக்குநர்களுக்கும் நல்ல வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்ற கூடிய நல்ல காலகட்டம் இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது என்று சிம்பு தெரிவித்தார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொடர்ந்து படம் குறித்து அப்டேட் கேட்கிறீங்க ஆர்வம் புரியுது ஆனால் போதிய அவகாசம் கொடுத்ததால்தான் நல்ல படத்தை தரமுடியும் என சிம்பு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்களின் பெருத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியானது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் புதுமையான தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்தார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. சித்தி இத்னானி,  அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் இன்றளவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. 

இந்நிலையில் படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, கௌதம், ஐசரி கணேஷ், உதயநிதி ஸ்டாலின், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் சிம்பு, இந்த காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம். சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகிறது. விக்ரம் தொடங்கி பொன்னியின் செல்வன், கன்னட திரைப்படமான காந்தாரா மற்றும் தற்போது வெளியாகியிருக்கும் லவ் டுடே வரை படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எல்லா இயக்குநர்களுக்கும் நல்ல வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அவர்களின் அந்த கனவை நிறைவேற்ற கூடிய நல்ல காலகட்டம் இப்போது தமிழ் சினிமாவில் நிலவி வருகிறது என்று தெரிவித்தார்.

Also read... மனைவி ஜோதிகாவின் காதல் பட ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த சூர்யா...!

தொடர்ந்து பேசிய சிம்பு ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல வேண்டும். படம் பண்ணிட்டு இருக்கும் போது பல அப்டேட் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், படக்குழு ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அதிக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது ஒரு தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால் தான் நல்ல படங்கள் வரும் அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் கதாநாயகர்களை தூக்கி மேலே வைப்பார்கள். நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் ரொம்ப தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் சிம்பு ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Simbu