முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘ஈஸ்வரன்’ படக்குழுவுக்கு தங்கத்துடன் தீபாவளி பரிசளித்த சிம்பு

‘ஈஸ்வரன்’ படக்குழுவுக்கு தங்கத்துடன் தீபாவளி பரிசளித்த சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

‘ஈஸ்வரன்’ படத்தில் பணியாற்றியவர்களுக்கு நடிகர் சிம்பு தீபாவளி பரிசளித்து மகிழ்வித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கிய ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பு 40 நாட்களில் நேற்றுடன் நிறைவடைந்திருக்கிறது. இந்நிலையில் படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசு வழங்கி அனைவரையும் சிலம்பரசன் மகிழ்வித்தார். மேலும் படத்தில் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கினார். தீபாவளி பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிலம்பரசனுக்கு படக்குழுவினர் அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட் செய்கிறார். ஜீரோ' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியாவின் 5-வதாக தயாரிப்பாக‘ஈஸ்வரன்’ படம் உருவாகியுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில் தீபாவளிக்கு டீசர் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

First published:

Tags: Eeswaran Movie, Simbu