அது அல்லவா இது - குழப்பத்தை ஏற்படுத்திய சிம்பு படத்தின் பர்ஸ்ட் லுக்!

சிம்பு பட போஸ்டர்கள்

வெந்து தணிந்தது காடு முதலில் தயாராகும், அது முடிந்ததும் நதிகளிலே நீராடும் சூரியன். சிலர் நினைப்பது போல் இரண்டும் ஒரே கதையல்ல. 

  • News18
  • Last Updated :
  • Share this:
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் சிம்பு இரு படங்கள் நடிக்கிறார் என்பதும், அதில் முதலாவதாக நதிகளிலே நீராடும் சூரியன் தயாராவதும் பழைய செய்தி. திடீரென, படத்தின் பெயரை மாற்றுவதாக செய்தி வெளியானது. தொடர்ந்து இன்று வெளியான பர்ஸ்ட் லுக்கில், வெந்து தணிந்தது காடு என முற்றிலும் புதிய பெயர் வைக்கப்பட்டிருந்தது.

நதிகளிலே நீராடும் சூரியனுக்கு சம்பந்தமேயில்லாமல் புதிய பெயர் இருந்ததால் பலருக்கும் ஆச்சரியம். விசாரித்ததில், நதிகளிலே நீராடும் சூரியன் கதையல்லவாம், வெந்து தணிந்தது காடு, இது முற்றிலும் வேறு கதையாம். அப்படியானால் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் கதி? திடீரென அந்தப் படத்தை கைவிட என்ன காரணம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கௌதம் முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை எடுக்கவே திட்டமிட்டுள்ளார். ஆனால், திடீரென சிம்புக்கு, இரண்டாவது படத்தின் கதை பிடித்துப்போக, முதலில் அதை எடுக்கலாம் என்று கூறியதன் அடிப்படையில், வெந்து தணிந்தது காடு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

Also read... ராமேஸ்வரத்தில் அருண் விஜய் 33 படப்பிடிப்பில் இணைந்து கொண்ட யோகி பாபு!

வெந்து தணிந்தது காடு முதலில் தயாராகும், அது முடிந்ததும் நதிகளிலே நீராடும் சூரியன். சிலர் நினைப்பது போல் இரண்டும் ஒரே கதையல்ல
Published by:Vinothini Aandisamy
First published: