Home /News /entertainment /

நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

நடிகை நிதி அகர்வாலுடன் லிவிங் டுகெதரில் சிம்பு? விரைவில் திருமணம்?

சிம்பு - நிதி அகர்வால்

சிம்பு - நிதி அகர்வால்

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நிதி அகர்வால் மார்வாரி குடும்பத்தைச் சேர்ந்தவர். பிஸினெஸ் மேனேஜ்மெண்டில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், தேர்ந்த டான்சரும் கூட.

    நடிகர் சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகர் ஜெயம் ரவியுடன் 'பூமி' படத்திலும், சிம்புவுடன் 'ஈஸ்வரன்' படத்திலும் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அவர் நடித்த அந்த 2 படங்களும் கடந்த வருடம் பொங்கலுக்கு வெளியானது.

    ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த நிதி அகர்வால் மார்வாரி குடும்பத்தைச் சேர்ந்தவர். பிஸினெஸ் மேனேஜ்மெண்டில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், தேர்ந்த டான்சரும் கூட. அவருக்கு தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை புரிந்துக் கொள்ளவும் பேசவும் தெரியும். தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது படங்களை பதிவிடும் நிதி அகர்வாலுக்கு லைக்ஸ்கள் குவிகின்றன.

    இந்நிலையில் இவருக்கும், சிம்புவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. இருவரும் ஈஸ்வரன் படத்தில் ஒன்றாக நடித்த போது நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஏற்கனவே கிரிக்கெட் வீரரை கே.எல்.ரகுலை காதலித்த நிதி அகர்வால், பின்னர் கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார். சிம்புவை பொறுத்தவரை நயன்தாரா, ஹன்சிகா என இரு நடிகைகளை காதலித்து பின்னர் தோல்வி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Simbu, Tamil Cinema

    அடுத்த செய்தி