Home /News /entertainment /

ஓடிடியில் தொடரும் சிம்பு, தனுஷ் போட்டி...!

ஓடிடியில் தொடரும் சிம்பு, தனுஷ் போட்டி...!

சிம்பு, தனுஷ்

சிம்பு, தனுஷ்

டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 24-ல் தனுஷின் அத்ரங்கி ரே நேரடியாக வெளியாவதாக அறிவிப்பு வந்த நிலையில், நேற்று சிம்புவின் மாநாடு படமும் அதே தேதியில் வெளியாகும் என சோனிலிவ் அறிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
தமிழ் திரையுலகில் எல்லா காலகட்டங்களிலும் இவரா அவரா என்ற இருமுனைப் போட்டி இருக்கும் முன்பு எம்ஜிஆர் - சிவாஜி, பிறகு கமல் - ரஜினி, அதையடுத்து விஜய் - அஜித். இப்போது தனுஷ் - சிம்பு.

திரைப்படங்களிலும் இந்தப் போட்டி எதிரொலிக்கும். முக்கியமாக சிம்பு படங்களில். தனுஷின் மன்மதராசா ஹிட்டானால் அதேபோல் ஒரு பாடலை சிம்பு தனது படத்தில் வைப்பார். அவர் அசுரன் என்று படம் நடித்தால், நான் அசுரனை அழிக்க வந்த ஈஸ்வரன் என டயலாக் வைப்பார். மாநாடு படத்திலும் வில்லன் பெயர் தனுஷ்கோடி.

ரசிகர்களுக்கு பவர்ஃபுல்லாக இருக்கட்டும் என்று தனுஷ்கோடி என்ற பெயரை மாநாடு படத்தின் வில்லனுக்கு வைத்ததாக வெங்கட்பிரபு கூறியிருந்தார். சிம்பு தற்போது நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படம்கூட, அசுரன் போல் ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டதன் விளைவுதான்.

அதேநேரம் தனுஷ் இந்தப் போட்டியை கண்டு கொள்வதில்லை. அவர்பாட்டுக்கு நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ரசிகர்கள் அப்படியில்லையே. இணையத்தில் அவர்கள் மோதாத நாள்கள் இல்லை.

அதனை இன்னும் விசிறிவிடுவது போல் டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் டிசம்பர் 24 தனுஷின் அத்ரங்கி ரே நேரடியாக வெளியாவதாக அறிவிப்பு வந்த நிலையில், நேற்று சிம்புவின் மாநாடு படமும் அதே தேதியில் வெளியாகும் என சோனிலிவ் அறிவித்துள்ளது.

அத்ரங்கி ரே இந்திப் படம். ஆனால், நேரடியாக டிசம்பர் 24 ஓடிடியில் வெளியாகிறது. (தமிழிலும்தான்). மாநாடு நேரடித் தமிழ்ப் படம். ஆனால், ஏற்கனவே திரையரங்கில் வெளியான பின் ஓடிடியில் வெளியாகிறது.

Also read... நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா? - இணையத்தில் கசிந்த தகவல்

ஒரேநாளில் வெளியாகும் இந்தப் படங்களில் எது அதிக பார்வையாளர்களை சென்றடையப் போகிறது என்று இப்போதே சிம்பு - தனுஷ் ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்துள்ளனர். இந்த சண்டைதான் ஓடிடி தளங்களின் முதலீடே.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush, Actor Simbhu

அடுத்த செய்தி