Home /News /entertainment /

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

சிம்பு

சிம்பு

நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் சிம்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சிம்பு அப்துல் காலிக் என்ற முஸ்லிம் இளைஞனாக நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    பல தடைகளை தாண்டி வெளியான மாநாடு திரைப்படம் தமிழகத்தில் வெற்றிநடை போட்டு வருகிறது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. மாநாடு வெற்றியை தொடர்ந்து, சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Actor Simbhu, Simbu

    அடுத்த செய்தி