மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் பைனான்சியர் உத்தம்சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் சாட்டிலைட் வெளியீட்டு உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்றதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை 20வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், கொட்டும் மழையிலும் இரவுபகல் பாராமல் தானும், மனைவியும் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாகவும், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாயை தானும், தன் மனைவியும் உத்தரவாதம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தில் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும்வரை சாட்டிலைட் உரிமைக்கு தடைவிதிக்கவும், பணத்தை தர உத்தரம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.
Also read... சிவகங்கையில் சட்ட கல்லுரி, வேளாண் கல்லூரியை துவக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Maanaadu, Madras High court