இது துணிச்சலான செயல் அல்ல... சித்தார்த்துக்கு பதில் கொடுத்த விக்னேஷ் சிவன்...!

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாக பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

news18
Updated: March 25, 2019, 4:25 PM IST
இது துணிச்சலான செயல் அல்ல... சித்தார்த்துக்கு பதில் கொடுத்த விக்னேஷ் சிவன்...!
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
news18
Updated: March 25, 2019, 4:25 PM IST
பாதிக்கப்பட்டால் மட்டுமே குரல் கொடுப்பது துணிச்சல் அல்ல என்று சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதிவிட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.

அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் #metoo எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாக கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து அநாகரிகமாக பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

#metoo இயக்கம் குறித்த திரைத்துறையினரின் மௌனம் தன்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. நீங்கள் பாதித்தால் மட்டுமே அது குறித்துப் பேசுவீர்கள் என்றால், இது துணிச்சலான செயல் அல்ல என்று நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
Loading...


இது நயன்தாராவைக் குறிக்கும் விதமாக இருப்பதால் இதற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், பெண்களின் பாதுகாப்புக்கும் அவர்களுடைய நலனுக்காகவும் எப்போதும் துணை நிற்பவர் நயன்தாரா.

அவர் பணியாற்றும் படங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய ஆதரவாக உள்ளவர். பெண்கள் பலருக்குப் பக்கபலமாகவும், பண ரீதியிலான உதவியையும் அளித்தவர். அவருடைய படங்களில் #metoo பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். ஆனால் இவற்றைச் சமூக வலைதளங்களில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்திக் கொள்வதில்லை.ஒரு பெண் மீதான மோசமான கருத்து குறித்துப் பேசும்போது அதைப் பற்றிப் பேசாமல் சிறிய குற்றச்சாட்டுகளை அவர்கள் சுமத்துகிறார்கள். ஒருவர் சமூகவலைதளங்களில் அமைதியாக இருப்பதாகத் தாக்கப்படுவது வேதனைக்குரியது” என்று கூறியுள்ளார்.

நயன்தாராவை பற்றி தவறாக பேசவில்லை - ராதாரவி விளக்கம் - வீடியோ

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...