முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்

நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை - சாய்னா ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கம்

சாய்னா நேவால் -சித்தார்த்

சாய்னா நேவால் -சித்தார்த்

யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என சித்தார்த் விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்க போய் வம்பில் சிக்கிக்கொண்டார் நடிகர் சித்தார்த். நீ இப்படி பண்ணியிருக்க கூடாது சிங்காரம் என ரஜினி ஸ்டைலில் ட்விட்டரில் சித்தார்த்-க்கு எதிராக கமெண்ட்கள் குவிந்து வருகிறது. கருத்து சுதந்திரம் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா என சித்தார்த் ட்வீட்க்கு கண்டனங்கள் வலுக்கிறது. சாய்னா நேவால் இந்தியாவின் பெருமை. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர். 24 இண்டர்நேஷ்னல் பட்டங்களை குவித்தவர். யார் இந்த சித்தார்த் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நடிகர் சித்தார்த் சினிமாவையும் தாண்டி அரசியல் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்கக்கூடியவர். பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதிலேயே திரும்பினார். ஏர்போர்ட் சென்றடைந்த மோடி, நான் உயிருடன் விமானநிலையம் வந்ததற்கு உங்கள் முதல்வர்கள் நன்றி கூறினேன் எனக் கூறுங்கள் என பாதுகாவலரிடம் கூறினார். இந்த விவகாரம் விவாதத்துக்குள்ளானது. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லையா இந்த நாட்டில் என விமர்சனங்கள் எழுந்தது. இதற்கான விளக்கத்தை பஞ்சாப் முதல்வர் கொடுத்துள்ளார்.

பிரதமரின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதால் சமூகவலைத்தளத்தில் இந்த விவகாரம் விவாதத்துக்குள்ளானது. பேட்மிண்டன் வீராங்கணையான சாய்னா நேவால் இதுதொடர்பாக ஜனவரி 5-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் ஏற்பட்டால் எந்த நாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. அராஜகவாதிகளால் பிரதமர் மோடி மீது கோழைத்தனமான தாக்குதலை ஏற்படுத்தியதற்கு வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

சாய்னாவின் இந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்த சித்தார்த், “ உலகின் நுட்பமான சேவல் சாம்பியன்.. கடவுளுக்கு நன்றி.. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா” என்று பதிலளித்திருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக சமூகவலைத்தளத்தில் கண்டனங்கள் எழுந்தது. சித்தார்த் தன் ட்வீட்டில் “Subtle cock”  என்று ஆபாசமாக குறிப்பிட்டிருந்தார் என்பதே அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. தேசிய மகளிர் ஆணையம் சாய்னா நேவாலுக்கு ஆட்சேபிக்கத்தக்க வகையில் ட்வீட் செய்த சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியது.

சாய்னா நேவால்

இதுகுறித்து பேசிய சாய்னா நேவால், “ அவர் சரியாக எந்த அர்த்தத்தில் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நடிகராக அவரை நான் விரும்பினேன். ஆனால் இது நன்றாக இல்லை. அவர் சிறந்த வார்த்தைகளால் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த முடியும். இது ட்விட்டர் இங்கு நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும் கருத்துக்களால் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

சாய்னா நேவால்

இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சாய்னா நேவாலின் கணவர் காஷ்யப், “ உங்களுடைய கருத்து எங்களை மிகவும் அதிருப்திக்குள்ளாகியது. உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக சொல்லலாம். அதற்கு நீங்கள் தகுந்த வார்த்தையை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு சொல்வது சரியானது என்று நீங்கள் நினைக்கீன்றீர்களா? என மிகவும் நாகரீகமாக கேட்டுள்ளார்.

எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் பயன்படுத்தும் சொற்களில் நாகரீகம் வேண்டும் என சித்தார்த்துக்கு எதிராக குரல்கள் ஒலிக்கின்றன. இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள சித்தார்த், “நான் தரக்குறைவாக எதுவும் சொல்லவில்லை. “Cock &Bull” என்பதில் இருந்துதான் குறிப்பிட்டு அந்த கருத்தை பதிவிட்டேன். ஆபாசமாக பதிவு செய்யவேன்டும் என்ற உள்நோக்கம் இல்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்” எனக் கூறியுள்ளார்.

First published:

Tags: Actor Siddharth, Modi, Saina Nehwal, Tweet, Twitter